tamilnadu

img

பரூக் அப்துல்லா கைது - தொடரும் மோடி அரசின் அட்டூழியம்

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் அராஜகமான முறையில்  மோடி அரசு கைது செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மோடி அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370,35 ஏ சட்டப்பிரிவுகளை ரத்து செய்தது. மேலும்  காஷ்மீரை  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு முன்னதாக காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் யூசுப் தாரிகாமி உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகஸ்ட் 4ம் தேதியே  கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தேசிய மாநாட்டுக்கட்சித்தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா (83) வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பரூக் அப்துல்லா அவர் விருப்பத்தின் பெயரிலேயே வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார் என்றார். இதைத்தொடர்ந்து தனது வீட்டில் இருந்தே செய்தியாளர்களை சந்தித்த பரூக் அப்துல்லா உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பொய் சொல்கிறார். எனது மக்கள் இதுபோன்ற நெருக்கடியான சூழலில் இருக்கும் போது நான் எப்படி வீட்டில் இருப்பேன். நான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். 
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், பரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது குறித்து மத்திய அரசு வரும் 30-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். 
இந்நிலையில் பரூக் அப்துல்லாவை நேற்று இரவே  பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதனால் விசாரணை எதுவுமின்றி அவர் 2 ஆண்டுகள் காவலில் வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

;